பவானிசாகர் அணை நீர்மட்டம் 54.07 அடியாக உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (மே.29) இன்று காலை 8 மணி நிலவரப்படி 53.98 அடியிலிருந்து 54.07 அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-05-29 07:30 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (மே.29) இன்று காலை 8 மணி நிலவரப்படி 53.98 அடியிலிருந்து 54.07 அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் 2வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், நீர்வரத்து குறைந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை (மே.28) நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 989 கன‌ அடியாக இருந்த நீர்வரத்து, புதன்கிழமை (மே.29) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 609 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

நேற்று காலை அணையின் நீர்மட்டம் 53.98 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 54.07 அடியாக உயர்ந்தது. அப்போது, அணையில் நீர் இருப்பு 5.48 டிஎம்சியாக இருந்தது.

Tags:    

Similar News