அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி குண்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி குண்டம் பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா, வரும் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் தீ மிதி திருவிழாவுக்கான பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் இன்று காலை, பத்ரகாளியம்மன் கோவிலில், அந்தியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.ஜி. வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன், பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவதாகவும், அதே சமயத்தில் தீ மிதிக்கும் பக்தர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.இந்த நிகழ்ச்சியில், அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.