பர்கூரில் கரடி தாக்கியதால் பாதிப்பு: ரூ.20 ஆயிரம் நிதி

அந்தியூர் அடுத்த பர்கூரில், கரடி தாக்கியதில் படுகாயமடைந்த விவசாயிக்கு, வனத்துறை சார்பில் முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.

Update: 2022-03-17 10:15 GMT

நிவாரண தொகையாக ரூ.20 ஆயிரம், ஈரையன் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, பர்கூர் வனச்சரக்கத்துக்கு உட்பட்ட சோளகனை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈரையன் (வயது 50). இவர், கடந்த 6ஆம் தேதி மாலை, காப்பு காட்டிற்கு கால்நடைகளுக்கு தீவனம் கொண்டுவர சென்றபோது , கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார். தற்போது ஈரையன் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார். அவருக்கு, அரசின் நிவாரண தொகை வழங்க, வனத்துறை அலுவலர்கள், அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

அதையடுத்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் கௌதம், உத்தரவின் பேரில் வனத்துறை சார்பில், முதற்கட்ட நிவாரண தொகையாக 20 ஆயிரம் ரூபாயை ஈரையன் குடும்பத்தாரிடம் வழங்கினார். அப்போது, பர்கூர் வனச்சரக அலுவலர்கள் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News