கொடிவேரி அணையில் குளிக்க தொடர்ந்து 58-வது நாளாக தடை

பவானிசாகர் அணையில் இருந்து 6,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் குளிக்க 58-வது நாளாக தடை நீடிப்பு.

Update: 2021-12-07 10:00 GMT

கொடிவேரி அணை.

கோபி அருகே கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகும். ‌‌ பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வருவதினால், தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் கொட்டிவருவதால் ஏற்கனவே தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து இன்று 6,300 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் ஆர்பரித்து அதிகளவு கொட்டி வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 58 நாட்களாக இந்த தடை நீடித்து வருகிறது. இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளே செல்ல தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News