பவானியில் விஷம் குடித்து பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழப்பு
பவானியில் விஷம் குடித்த பனியன் கம்பெனி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி வர்ணபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சிவராஜ் மகன் பிரபு (வயது 30). பட்டப்படிப்பு படித்துள்ள பிரபு குமாரபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, விலை உயர்ந்த செல்போனனை பிரபு தொலைத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த பிரபு, கடந்த 6ஆம் தேதி எலி மருந்தை குடித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் பிரபுவை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.