ஈரோடு அகஸ்தியர் வீதியில் காசநோய் இல்லா ஈரோட்டிற்கான விழிப்புணர்வு பிரச்சாரம்
ஈரோடு அகஸ்தியர் வீதியில் காசநோய் இல்லா ஈரோட்டிற்கான பிரச்சார இயக்கம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (டிச.11) நடைபெற்றது.
ஈரோடு அகஸ்தியர் வீதியில் காசநோய் இல்லா ஈரோட்டிற்கான பிரச்சார இயக்கம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (டிச.11) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகராட்சியில் அகஸ்தியர் வீதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்கத்தின் கீழ் தீவிர காச நோய் கண்டுபிடிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஈரோட்டில் கடந்த டிச.7ம் தேதி மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவால் துவக்கி வைக்கப்பட்டு, துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் ஆலோசனைப்படி காசநோய் இல்லா ஈரோடு இயக்கத்தின் கீழ தீவிர காச நோய் கண்டுபிடிப்பு முகாம் மற்றும் காச நோய் ,புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, மருத்துவ அலுவலர் சங்கரநாராயணன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஹரிஹரன், காசநோய் சுகாதார பார்வையாளர் ஜெகன், சுகாதார ஆய்வாளர் பவித்ரன், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 75 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவின் மூலமாக மார்பக ஊடுகதிர் பரிசோதனை, சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.