ஆப்பக்கூடலில் ஆவாரம்பூ, பூலாம் பூ விற்பனை அமோகம்

நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி ஆவாரம் பூ, பூலாம் பூ விற்பனை அமோகமாக நடந்தது.

Update: 2022-01-12 16:30 GMT

விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பூலாம் பூ மற்றும் ஆவாரம் பூ. 

பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான நாளை (வியாழக்கிழமை) போகி பண்டிகை ஆகும். பழையன கழிந்து, புதியன புகும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் புதியவற்றை வரவேற்கும் வகையில், வீட்டின் கூரையில் வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவது வழக்கம்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை காப்பு கட்ட ஏற்றவாறு சிறு சிறு கட்டுக்களாக கட்டி வியாபாரிகள் ரோட்டோரம் விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஒரு கட்டு ரூ.5-க்கும், 3 கட்டுகள் ரூ.10-க்கும் விற்பனை செய்கின்றனர். இதனை ஆப்பக்கூடல், சக்திநகர் , ஒரிச்சேரி , கீழ்வாணி சுற்று பகுதிகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News