ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைதான ஆட்டோ டிரைவர்
ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.;
ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு பெரியசேமூர் சுப்பிரமணியநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மகன் மதன்குமார் (வயது 27). ஆட்டோ டிரைவர். திருமணமாகி குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், மதன்குமார் ஈரோட்டை சேர்ந்த 7 வயது மற்றும் 9 வயதுடைய சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் காவல்துறையினர் மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளை நைசாக பேசி மதன்குமார் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
விசாரணையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதால், மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று கூறினர். அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மதன்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.