கவுந்தப்பாடி அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுபாளையத்தில் காதல் விவகாரத்தில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்.;
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரபு. வெல்டிங் தொழிலாளி. பிரபு தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பி.மேட்டுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, வெங்கமேடு பகுதியை சேர்ந்த சுந்தரம் மற்றும் அவரது மனைவி இருசக்கர வாகனத்தில் வந்த பிரபுவை வழிமறித்தனார்.
இதனையடுத்து, எனது மகளை காதலிக்கிறாயா என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், சுந்தரம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபுவை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பிரபுவை கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.