சென்னிமலையில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் சாமிநாதன் 62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்று (பிப்.24) நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில், 62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.;

Update: 2025-02-24 12:10 GMT

சென்னிமலையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கிய போது எடுத்த படம்.

சென்னிமலையில் இன்று (பிப்.24) நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில், 62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் சமுதாய நல கூடத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  62 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை கலந்து கொண்டு வழங்கினார்.


முன்னதாக, சென்னிமலை தலைமை அஞ்சல் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்டு, முதல் விற்பனையை தொடங்கி வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தொடர்ந்து, 35 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, துணைப் பதிவாளர் காலிதாபானு, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆனந்தி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News