அந்தியூர் அருகே வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
POCSO Act அந்தியூர் அருகே ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்ற கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை என அவரது தந்தை வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
POCSO Act
இதனடிப்படையில் மாணவியை தேடிவந்த போலீசார் அந்தியூர் பகுதியில் மாணவியை மீட்டனர். இதையடுத்து, மாணவியை திருமண ஆசை காட்டி அழைத்து சென்றதாக, வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள சென்னம்பட்டி காலனியை சேர்ந்த தங்கராசு மகன் அண்ணாதுரையை (வயது 22) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து அண்ணாதுரையை இன்று மாலை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.