ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் நியமனம்

ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட செயலாளர்களாக அமைச்சர் சு.முத்துசாமி, என்.நல்லசிவம் ஆகியோர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2022-09-29 10:30 GMT

ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், அந்தியூர் ஒன்றிய கழக செயலாளர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல் பேரூர், ஒன்றிய, பகுதி, நகர, மாநகர, மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகள் விபரம் வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:- 

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர்கள்:- ஈரோடு தெற்கு மாவட்ட அவைத்தலைவராக குமார்முருகேஸ், செயலாளராக அமைச்சர் சு.முத்துசாமி, துணை செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், செல்லப்பொன்னி, பொருளாளர் பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய கழக செயலாளர்களாக மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், மொடக்குறிச்சி மேற்கு குணசேகரன், தெற்கு விஜயகுமார், கொடுமுடி வடக்கு சின்னச்சாமி, கொடுமுடி மேற்கு நடராஜன், பெருந்துறை வடக்கு சின்னசாமி, தெற்கு சாமி, கிழக்கு பெரியசாமி, சென்னிமலை வடக்கு செங்கோட்டையன், ஊத்துக்குளி வடக்கு சுப்பிரமணியம், தெற்கு ஈஸ்வரமூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ராஜா, ஈரோடு ஒன்றிய செயலாளர் சதாசிவம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஈரோடு மாநகர அவைத்தலைவராக சேகரன், செயலாளர் சுப்பிரமணியம், துணை செயலாளர்கள் நந்தகுமார், சந்திரசேகர். பாத்திமா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர்கள்:- ஈரோடு வடக்கு மாவட்ட அவைத்தலைவராக பெருமாள்சாமி, செயலாளர் என். நல்லசிவம், துணை செயலாளர்கள் அறிவானந்தம், குருசாமி, கீதாநடராஜன், பொருளாளராக சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய கழக செயலாளர்களாக பவானி வடக்கு பவானி சேகர், தெற்கு துரைராஜ், அம்மாபேட்டை வடக்கு சரவணன், தெற்கு ஈஸ்வரன், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம், கோபி வடக்கு ரவீந்திரன், தெற்கு முருகன். டி.என்.பாளையம் சிவபாலன், நம்பியூர் செந்தில்குமார். பவானிசாகர் வடக்கு மகேந்திரன், தெற்கு காளியப்பன், சத்தியமங்கலம் வடக்கு தேவராஜ், தெற்கு இளங்கோ, தாளவாடி மேற்கு சிவண்ணா, கிழக்கு நாகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பவானி நகர செயலாளராக ப.சீ.நாகராசன், கோபிசெட்டிபாளையம் என்.ஆர்.நாகராஜ், சத்தியமங்கலம் ஜானகி, புளியம்பட்டி சிதம்பரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News