தீபாவளி பட்டாசு விற்பனை: தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

Diwali Crackers - தீபாவளியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு செய்ய தற்காலிக உரிமம் பெற வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-07 10:30 GMT

 பைல் படம்

Diwali Crackers - ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்களின் நலன் கருதி தீபாவளி பண்டி கைக்கு முன்னதாகவே, அவர்களது வியாபாரத்தை துவங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும் உரிமங்களை பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி. தற்போது மனுதாரர் கள் வெடிபொருள் விதிகள் 2008ன் படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்கள் ஏதேனும் ஒன்றில் சேவை கட்டணமாக ரூ.500 செலுத்தி, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 30ம் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.

மேலும் மனுதாரர்கள், பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டு டன் புலவரைப்படம்- (6 நகல்கள்). கிரயப்பத்திர நகல்கள்-6 (அசல் மற் றும் 5 நகல்கள்), சேவைக் கட்டணம் ரூ.500 செலுத் தியதற்கான ரசீது, முகவரிக்கான ஆதாரம் (பேன் கார்டு. ஆதார் கார்டு. ரேஷன் கார்டு), சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம்-2 ஆகியவற்றினை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேற்படி விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும். நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News