பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஆப்பக்கூடல் ஏரி: பொதுமக்கள் மகிழ்ச்சி

அந்தியூர் வரட்டுப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழையால் ஆப்பக்கூடல் ஏரி நிரம்பியது.;

Update: 2022-01-14 06:15 GMT
பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஆப்பக்கூடல் ஏரி: பொதுமக்கள் மகிழ்ச்சி

நிரம்பி வழியும் ஆப்பக்கூடல் ஏரி.

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் ஏரி உள்ளது. இந்த ஏரியயானது பவானி-சத்தியமங்கலம் நெடுஞ்சாலை அருகே சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி , கெட்டிசமுத்திரம் ஏரி , அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி,  வேம்பத்தி ஏரி நிரம்பியது. வேம்பத்தி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி ஆப்பக்கூடல் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வரட்டும் பள்ளம் அணை பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரியானது நிரம்பி ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் ஆப்பக்கூடல் ஏரியானது முழு கொள்ளளவான 11.50 அடியை எட்டி உபரிநீர் தற்போது வெளியேறி வருகிறது. வெளியேறி வரும் உபரிநீர் பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பல வருடங்களுக்கு பிறகு நிரம்பியதை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News