ஆப்பக்கூடல் அருகே பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆப்பக்கூடல் அருகே பள்ளியில் நடந்த போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி காவல் ஆய்வாளர் பேசினார்.;

Update: 2022-08-04 08:45 GMT

போதைபொருளால் ஏற்படும் ஆபத்து குறித்து எஸ்.ஐ., கோவிந்தராஜ் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆப்பக்கூடல் போலீஸ் நிலைய எஸ்.ஐ., கோவிந்தராஜ், மதுப்பழக்கம் புகைப்பிடித்தல், கஞ்சா ஆகிய போதை பொருள் பயன்படுத்தினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.இதில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News