அந்தியூர் அருகே குட்டிகளுடன் மீட்கப்பட்ட பாம்புகள்
அந்தியூர் அருகே மீட்கப்பட்ட குட்டிகளுடன் மீட்கப்பட்ட பாம்புகளை, வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விட்டனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கூத்தபூண்டி பகுதியை சேர்ந்த வர் சந்திரமோகன். விவசாயியான இவர், நேற்று இரவு, தனது வீட்டின் அருகே கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்றை கண்டார். இதனையடுத்து அந்த பாம்பை மீட்டு பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்தார்.
பின்னர் இன்று காலை அந்தியூர் வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக, டிரம்மை திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த கண்ணாடி விரியன் பாம்பு 30 குட்டிகளை ஈன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து குட்டிகளுடன் கண்ணாடி விரியன் பாம்பை, இன்று மாலை வனத்துறை அதிகாரிகளிடம் சந்திரமோகன் ஒப்படைத்தார். ஒப்படைக்கப்பட்ட பாம்பை அந்தியூர் வரட்டுப்பள்ளம் பகுதியில் வனத்துறையினர் பத்திராமாக விட்டுச் சென்றனர்.
இதேபோல், இன்று அந்தியூர் அருகே உள்ள பாறையூர் பகுதியைச் சேர்ந்த நல்லசிவம் என்பவரின் வீட்டில் கொடிய விஷம் கொண்ட கருநாகப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. அந்தியூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று பத்திரமாக நாகப்பாம்பை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன்பின் கருநாகப் பாம்பை வரட்டுப்பள்ளம் அணை பகுதியில், வனத்துறையினர் விட்டு சென்றனர்.