தடை செய்யப்பட்ட பகுதியில் இயங்கிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு சீல்!

அந்தியூரில், தடை செய்யப்பட்டப்பகுதியில் இயங்கிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு, ஈரோடு கலெக்டர் கதிரவன் உத்தரவுப்படி, சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-14 13:39 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம்  முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில், கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளான புது மேட்டூர், பள்ளிபாளையம், தவுட்டுப்பாளையம் ஆகிய பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, ஈரோடு கலெக்டர் கதிரவன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது,  தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஒன்றான கருப்புசாமி கோயில் என்ற இடத்தில்,  பணியாளர்களை வைத்து தனியார் கார்மென்ட்ஸ் கம்பெனி ஒன்று இயங்கி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தியூர் வட்டாட்சியர் வீரலட்சுமியிடம், கார்மெண்ட்ஸ் மூடி சீல் வைக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள், அந்த கம்பெனிக்கு சீல் வைத்தனர். மேலும் இந்நிறுவனத்தின் மீது அந்தியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News