கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை
ஈரோட்டில், அண்ணனை பார்த்துவிட்டு வருவதாக கூறி வெளியே சென்ற மாணவி , வீடு திரும்பவில்லை;
ஈரோட்டில் பரபரப்பு மாணவிகள் உள்பட மூவர் மர்ம மாயம்
ஈரோடு, பெரியார் நகர், அசோகபுரியை சேர்ந்த ராஜாவின் மகள் துளசி (15) அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 22ஆம் தேதி இரவு, பக்கத்து தெருவில் உள்ள அண்ணனை பார்த்துவிட்டு வருவதாக கூறி வெளியே சென்வள், வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அவரது தாய் அன்புக்கரசி அளித்த புகாரின் பேரில், ஈரோடு டவுன் போலீசார் தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவமாக, வைராபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த துணி வியாபாரி சுரேஷ் (40) தனது நண்பர்கள் மாதேஸ்வரன், முருகன், வினோத் குமார் ஆகியோரின் வாக்குறுதியை நம்பி, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற பின்னர், அந்த நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர். பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து வியாபாரி சுரேஷிடம் கோரிக்கை விடுத்த நிலையில், மன உளைச்சலால் அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவரது மனைவி ரோகினி புகார் அளித்ததன் பேரில், கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், கோபி அருகே நாகதேவம்பாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஸ்ரீதேவி (19), கடந்த 20ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. அவரது தந்தை பண்ணாரி புகார் அளித்த நிலையில், கோபி போலீசார் தேடிவருகின்றனர்.
தொடர்ச்சியாக நடைபெறும் இவ்விதமான மர்ம மாயங்கள், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.