சேலத்தில் தங்கம், வெள்ளி விலையேற்றம்

சேலத்தில் தங்கம், வெள்ளி விலையிலான அதிரடி மாற்றம், பவுனுக்கு ரூ.800 உயர்வு;

Update: 2025-03-29 09:00 GMT

சேலத்தில் ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.800 விலை உயர்வு

சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி தங்கம் விலை ஏற்ற இறக்கமாக காணப்படும் நிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் தங்கம் கிராம் ரூ.8,175, பவுன் ரூ.65,400க்கு விற்பனையானது. ஆனால் நேற்று கிராமுக்கு ரூ.100, பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, கிராம் ரூ.8,275, பவுன் ரூ.66,200க்கு விற்பனையானது. அதேபோல் நேற்று முன்தினம் வெள்ளி கிராம் ரூ.107, கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கு விற்றது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3, கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, கிராம் ரூ.110, கிலோ வெள்ளி ரூ.1,10,000க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு குறித்து நகைக் கடைக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், "அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு கொள்கை, சில நாடுகளுக்கு இடையேயான போர் மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றால் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது" என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News