அந்தியூர் அருகே வாக்குப்பதிவு இயந்திரம் பழுது :ஒரு மணி நேரம் பாதிப்பு

அந்தியூர் அருகே வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தடைபட்டது.;

Update: 2021-04-06 11:40 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 52வது எண் கொண்ட வட்டக்காடு வாக்குச்சாவடியில் காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு துவங்கியது.


தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்களித்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில், திடீரென மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, வாக்குச்சாவடிக்கு வந்த பொறியாளர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்து, சரியாக இணைக்கப்படாத வயர்களை சரி செய்தனர். அதற்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படத் துவங்கியது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 

Tags:    

Similar News