ஐந்து வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஐந்து வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.

Update: 2021-04-15 10:57 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வட்டக்காட்டில், ஐந்து வயது சிறுமிக்கு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு, சளியுடன் கூடிய தொடர் காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த போது டாக்டர்கள், டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து அச்சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக, அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சவுண்டம்மாள் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் அடிப்படையில், அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி மோகனவள்ளி மேற்பார்வையில், எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சதீஷ்குமார், மருத்துவர்கள் மேகலா சுரேஷ் ஆகியோர் இன்று டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக வட்டக்காடு பகுதியில் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி உள்ளிட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம் என மருத்துவர்கள் கூறினர்.

Tags:    

Similar News