அந்தியூர் எம்எல்ஏ அலுவலகத்தில் அன்பழகன் நினைவுதினம் அனுசரிப்பு
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பேராசிரியரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பேராசிரியரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாச்சலம் அங்கு வைக்கப்பட்டிருந்த பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்.
இதைத் தொடர்ந்து திமுக மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் செபஸ்டியான், பேரூர் கழக துணைச் செயலாளர் ஏ.சி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று மலர்தூவி மரியாதை செய்தனர்.