ஈரோடு அந்தியூரில் கர்நாடக மாநிலத்தில் இருந்து உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 1 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூங்கில்பட்டியில், முருகேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.அப்போது கர்நாடக மாநிலத்தில் கோழி கழிவுகளை இறக்கி விட்டு, நாமக்கல் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையில் நாமக்கல் மாவட்டம் என் புதுப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சிவக்குமாரிடம், உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 58 ஆயிரத்து 400 ரூபாய் பணம் இருந்தது தெரிந்தது.இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.