நகைக்கடன் தள்ளுபடி வதந்தி- வங்கி முன்பு குவிந்த மக்கள்

Update: 2021-03-04 12:15 GMT

ஈரோட்டில் நகைக்கடன் குறித்த வதந்தியால் வங்கியில் அதிகமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகஅரசு தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு விவசாய கடன் தள்ளுபடி, சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி என்ற நிலையில் கடைசியாக கூட்டுறவு சங்கங்களில் 6 சவரனுக்கும் குறைவான நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது. அதனால் நகைகடன் பெற்றவர்கள் மகிழ்சியடைந்துள்ள னர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைக்கடன் பெற அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வங்கி முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது நகை கடன் பெற்றால் அடுத்து ஆட்சி அமைக்கும் ஆளும் அரசு அனைத்து வங்கிகளிலும் நகைக்கடன் தள்ளுபடி செய்யும் என அப்பகுதியில் வதந்தி பரவியதால் தான் அப்பகுதி பொதுமக்கள் நகைகடன் பெற வங்கி முன்பு குவிந்துள்ளனர். வங்கியில் நாள் ஒன்றுக்கு 40 நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதாக கூறப்படும் நிலையில் 40 நபர்களுக்கு மட்டும் டோக்கன் விநியோகித்து வங்கி நிர்வாகம் நகைக்கடன்களை வழங்கி வருகிறது.

இதனால் மற்றவர்கள் வங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வரிசையில் நிற்க வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தியூரில் உள்ள பிரம்மதேசம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News