ஈரோட்டில் 66 மையங்களில் கொரோனா தடுப்பூசி
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரளா மாநில முன்னாள் கவர்னருமான சதாசிவம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இன்று முதல் 60 வயது மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தடுப்பூசி போடும் முதியவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் எனவும் அப்படி இல்லை என்றால் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணங்களை காண்பித்து போட்டுக் கொள்ளலாம் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 24 அரசு மையங்களிலும், 42 தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதுவரை உள்ள இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கோரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதனையொட்டி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் கேரளா மாநில முன்னாள் கவர்னருமான சதாசிவம் அவரது மனைவியுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.