ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும், தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.