சாலை ஓரத்தில் சுற்றும் யானை: வனத்துறையினர் எச்சரிக்கை
பர்கூர் மலைப் பகுதியில் சாலையோரங்களில் யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாகவே யானை கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும், குறிப்பாக சிறுத்தை நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இவற்றை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பர்கூர் மேற்கு மலைப் பகுதியில் உணவுக்காக காட்டைவிட்டு சாலையோரத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இந்த யானையை அடிக்கடி அப்பகுதி மக்கள் பார்ப்பதாகவும், மனிதர்களைக் கண்டு பயப்படப்படாமல் சாலையிலேயே சுற்றி திரவதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து பர்கூர் வனத்துறையினர் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் ஜாக்கிரதையாக சாலையை கடக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.