இரட்டை கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை

Update: 2021-01-22 10:46 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பவானி முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆத்தப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 2ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமாரை அந்தியூர் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நல்லசாமியை கைது செய்தனர். அந்தியூர் போலீசார் நல்லசாமியிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே கொன்னமரத்தையன் கோவில் பகுதியில் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த கோவில் பாதுகாவலராக இருந்த அந்தியூர் வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த வடிவேல் மற்றும் டி.என்.பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி ஆகிய இருவரையும் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.

எனவே நல்லசாமியை அந்தியூர் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பவானி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணையில் குற்றம் நிரூபிக்கபட்டதால் குற்றவாளி நல்லசாமிக்கு இரட்டை கொலை செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும் மேலும் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்ததற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Tags:    

Similar News