அந்தியூர் செல்லீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா
தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் இன்று காலை 5.22 மணிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். இதனை அடுத்து அனைத்து சிவாலயங்களிலும் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து சனி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூரிலுள்ள செல்லீஸ்வரர் திருக்கோயிலில் சனி பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லீஸ்வரர் திருக்கோயிலில் சனி பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் இன்று காலை 5.22 மணிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். இதனை அடுத்து அனைத்து சிவாலயங்களிலும் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து சனி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அந்தியூர் செல்லீஸ்வரர் திருக்கோயிலில்உள்ள சனிபகவானை தரிசனம் செய்ய அந்தியூர் ,தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், அண்ணா மடுவு, சின்னத்தம்பி பாளையம் ,சங்கரா பாளையம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்