அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி;

Update: 2022-04-19 06:15 GMT

வரட்டுப்பள்ளம் அணை பகுதி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யக்கூடிய மழை நீரை தேக்கிவைத்து, பின்பு பாசனத்திற்கும் கோடைகாலங்களில் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் நீராகவும் இந்த அணை பயன்படுகிறது.

கடந்த 14ஆம் தேதி 70.0மி.மீ அளவிற்கும், 15ஆம் தேதி 8.0மி.மீ, 18-ம் தேதி 44.0 மி.மீ மழை வரட்டுப்பள்ளம் அணை சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்தது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 122.0 மி.மீ மழைநீர் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அணையின் முழு கொள்ளளவான 33. 5 அடி உயரமுள்ள அணையில் கடந்த வாரம் 27.0 அடியாக இருந்தது. கடந்த மூன்று நாட்களில் 6 சென்டிமீட்டர் நீர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பெய்த மழையினால் 27.5 அடியாக தற்போது உள்ளது. இதனால் அணையை சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News