அந்தியூரில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினார்
அந்தியூர் அருகே நடந்த நிகழ்வில் ரூ.3.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஏ.ஜி.வெஙாகடாசலம் எம்எல்ஏ வழங்கினார்.;
எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு மத்திய காலக் கடன்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று அந்தியூர் அத்தாணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன் சலுகைகள் பற்றி விரிவாகப் பேசினார்.இதைத் தொடர்ந்து, 14 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 390 பயனாளிகளுக்கு, 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் திமுகவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.