அந்தியூர்: வருவாய்த்துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடந்தது. இதில் அந்தியூர் வட்டார தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். அனைத்து நிலைகளிலும் பணியிறக்க பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். பதவி உயர்வு காலதாமதமின்றி வழங்குதல், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.