அந்தியூரில் வேளாண் சிறப்பு முகாம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது;

Update: 2022-05-10 14:45 GMT

மைக்கேல்பாளையத்தில் நடைபெற வேளாண் சிறப்பு முகாமில்  பங்கேற்ற விவசாயிகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் வேம்பத்தி மைக்கேல்பாளையம் சின்னத்தம்பிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று மைக்கேல்பாளையம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற வேளாண் சிறப்பு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.வேளாண்மை உழவுத்துறை, கால்நடைத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வள ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, விவசாய கடன் அட்டை, சொட்டு நீர் பாசனம், பட்டா மாறுதல், மின் இணைப்பு பெயர் மாற்றம், விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்குதல் உள்பட விவசாயிகளின் திட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.

மேலும் இது சம்பந்தமாக விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெற்றனர்.இதில், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மேலாளர் கந்தசாமி மற்றும் விவசாயிகள் என 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News