அந்தியூர் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில் வேட்புமனு தாக்கல்

அந்தியூர் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.;

Update: 2022-02-04 15:45 GMT
அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வுநிலை பேரூராட்சி வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகளில் போட்டியிட, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்  முன்னிலையில், அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 18 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Tags:    

Similar News