அந்தியூர் பேரூராட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல்

அந்தியூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 18 பேரும் இன்று ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Update: 2022-02-03 16:30 GMT

வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்கள்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூரிட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 9 வார்டுகள் பெண்களுக்கும், ஒன்பது வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சக்திவேல் மற்றும் ஜெகநாதன் ஆகியோரிடம் 18 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பதிமூன்றாவது வார்டில் பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் கலைச்செல்வி குருராஜ், 16 வது வார்டில் போட்டியிடும் பாலுசாமி, 17வது வார்டில் போட்டியிடும் பார் மோகன், 8வது வார்டில் போட்டியிடும் பாலமுருகன் உள்ளிட்ட 18 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், பிரச்சாரத்தை வேகப்படுத்த வேண்டும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News