அந்தியூரில் ரூ.40 லட்சத்தில் சிறுபாலம், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு எம்எல்ஏ பூமி பூஜை

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.40 லட்சத்தில் சிறுபாலம், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

Update: 2025-01-05 09:00 GMT

அந்தியூர் தவிட்டுப்பாளையம் பாலம் அருகில் சிறுபாலம், மழைநீர் வடிகால் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த போது எடுத்த படம். உடன், நெடுஞ்சாலைத்துறை அந்தியூர் பிரிவு உதவிப் பொறியாளர் பாபு சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

அந்தியூரில் ரூ.40 லட்சத்தில் சிறுபாலம், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அண்ணா சாலையில் மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இதற்கு தீர்வு காண வேண்டும் என்று அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலத்திடன் அப்பகுதி மக்களும், வணிகர்களும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இக்கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு அப்பகுதியில் சிறுபாலம் மற்றும் மழைநீர் வடிகால் கட்ட பரிந்துரை செய்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்தியூர் தவிட்டுப்பாளையம் பாலம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று (ஜன.4) நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினரும், மாநில மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரிய உறுப்பினருமான ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில், நெடுஞ்சாலைத்துறை அந்தியூர் பிரிவு உதவிப் பொறியாளர் கி.பாபு சரவணன், பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, பேரூர் திமுக செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News