அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் கிராமங்களில் அடிப்படை வசதி பற்றி ஆய்வு
அந்தியூர் அருகே உள்ள நகலூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் குறித்து,சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு செய்தார்.;
அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாஜலம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் அந்தியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.இதன் அடிப்படையில் இன்று நகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட குண்டு புளியமரம் பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்தார்.
அப்போது அடிப்படை வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.அப்போது நகலூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.