அந்தியூர் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

அந்தியூர் அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2022-01-09 15:45 GMT

அந்தியூர்  அரசு மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை,  அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

உடன், மருத்துவர் கவிதா  மற்றும் செவிலியர்கள் இருந்தனர்.அவர்களிடம் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் வசதி போதுமானதாக இருக்கிறதா, எத்தனை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன போன்ற விபரங்களை கேட்டார்.மேலும், மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.


Tags:    

Similar News