பிரம்மதேசம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த அந்தியூர் எம்எல்ஏ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அந்தியூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2022-06-13 11:15 GMT

ஊராட்சி மன்ற அலுவலகத்தை அந்தியூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் அந்தியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு ரூ.19.72 லட்சம் மதிப்பிலான ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் வளர்மதி தேவராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்துலட்சுமி முனுசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜலட்சுமி நாகேஸ்வரன், ஊராட்சி தலைவர் முனுசாமி, ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News