அந்தியூர்: கழக வளர்ச்சி பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அந்தியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.;

Update: 2022-05-31 05:45 GMT

அமமுக சார்பில் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம், மண்டல பொறுப்பாளரும், தலைமை நிலைய செயலாளருமான சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.

அந்தியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்‍கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் சேலஞ்சர் என்கிற துரைசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் தரணி என்கிற சண்முகம், மாநில அமைப்பு செயலாளர் துளசி மணி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைத்தலைவர் சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட கழக செயலாளர் செல்வம் என்கிற சதாசிவமூர்த்தி , மாவட்ட பொறுப்பாளர் மாரசாமி, மாவட்ட அவைத்தலைவர் பச்சாக்கவுண்டர், ஜெ.பேரவை செயலாளர் மாதேஷ் என்கிற ரமேஷ், பேரூர் கழக செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

ஒன்றிய கழக, நகர் கழக, கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கழக வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்‍கப்பட்டது.

Tags:    

Similar News