நான்கு மாநில வெற்றி : அந்தியூரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது கொண்டாடும் வகையில் அந்தியூர் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.;
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது கொண்டாடும் வகையில் அந்தியூர் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.உத்தரபிரதேசம் கோவா மணிப்பூர் பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. மற்ற நான்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதை கொண்டாடும் விதமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில், இன்று மாலை பஸ்நிலையம் எதிரில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பாஜகவினர் மகிழ்ச்சியை கொண்டாடினர்.