அந்தியூர் அடுத்த பர்கூரில் ஆம்புலன்சை வழிமறித்த யானையால் பரபரப்பு

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் சாலையின் குறுக்கே உள்ள மூங்கில் தூண்களை உட்கொண்டிருந்த யானையால் பரபரப்பு.

Update: 2022-04-26 09:15 GMT

சாலையை வழிமறித்த மூங்கில் தூண்களை உட்கொண்டிருந்த யானையை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி மயானம் அருகே பர்கூர்- அந்தியூர்  சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையில் நின்று அங்கிருந்த மூங்கில் தூர்களை முறித்து தின்று கொண்டிருந்தது.அப்போது பர்கூரிலிருந்து 108 ஆம்புலன்சு எலச்சிபாளையம் மலை கிராமத்திற்கு நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்காக அழைத்துவர சென்றது.நடுரோட்டில் யானை நிற்பதை பார்த்த 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தினர். யானையும் நகராமல் சாலையின் நடுவே தொடர்ந்து நின்று கொண்டிருந்தது.

சுமார் அரை மணி நேரம் நின்ற காட்டு யானை பின்னர் காட்டுக்குள் சென்றது. அதன் பின்னரே ஆம்புலன்சு டிரைவர் வண்டி அங்கிருந்து எடுத்து கர்ப்பிணியை மீட்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து அனுமதித்தார். யானைகள் உணவு தண்ணீர் தேடி சாலையோரம் அடிக்கடி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், யானை அருகில் சென்று புகைப்படம் எடுப்பது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News