அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ 3.52 லட்சத்திற்கு ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ 3.52 லட்சத்திற்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது.;
கோப்பு படம்
அந்தியூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடப்பது வழக்கம். இன்று முதன்முதலாக தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் துவங்கியது. இதில் 5,002 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன. தேங்காய் குறைந்தபட்சம் ரூ 5.64 முதல் அதிகபட்சமாக ரூ. 15.74 வரை ரூ. 42 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. தேங்காய் பருப்பு 50 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்ததில், கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ. 78.29 முதல் ரூ. 90.89 வரை ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கும், எள் 1 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது.
இது கிலோ ஒன்று ரூ. 80.69 ரூபாய் வீதம் ரூ. 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், மக்கா சோளம் 8 மூட்டைகள் விற்பனைக்கு வந்ததில் கிலோ ஒன்று ரூ.18.89க்கு என, ரூபாய் 12 ஆயிரத்திற்கும், ஆமணக்கு 1 மூட்டை ரூ.430 க்கும், பாசிப்பயறு 10 மூட்டைகள் குறைந்த பட்சம் ரூ.70.05 முதல் அதிகபட்சமாக ரூ.91.50 வரை மொத்தம் 59 ஆயிரத்துக்கும், துவரை 4 மூட்டைகள் ரூ.20 ஆயிரத்துக்கும், தட்டைப்பயிறு 6 மூட்டைகள் ரூ.27 ஆயிரத்துக்கும், உளுந்து 8 மூட்டைகள் ரூ.27 ஆயிரத்துக்கும், நரிப்பயிறு 1 மூட்டையானது ரூ.5 ஆயிரத்துக்கும் என மொத்தம் 79.03 குவிண்டால் வேளாண் விளைபொருட்கள் ரூ. 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதில் 87 விவசாயிகள் பயன்பெற்றதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வேளாண் விளைபொருட்களை அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்தாணி, சின்னத்தம்பி பாளையம், மைக்கேல்பாளையம், செல்லம்பாளையம், பச்சாபாளையம், செம்புளிச்சாம் பாளையம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கோவை, திருப்பூர், அவிநாசி, பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இதனை வாங்கி சென்றனர்.