அண்ணா பிறந்தநாள்: ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளையொட்டி, ஈரோடு பெரியார் வீதியில் உள்ள பெரியார் - அண்ணா நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் சிலைக்கு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.;
திராவிட இயக்க முன்னோடி தலைவர், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114-ஆவது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கும், படங்களுக்கும் அரசியல் கட்சியினர் முதல் பல்வேறு அமைப்பினர்கள் வரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு பெரியார் வீதியில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகத்தில் அண்ணாவின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி.என்.சிவக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.