ஈரோடு அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை

ஈரோடு அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியதையொட்டி, விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-07-13 07:15 GMT

ஈரோடு அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தில் 2024-2025 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஈரோடு அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியதையொட்டி, விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தில் 2024-2025 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் மாணவர் சேர்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், முதுநிலை படிப்புகளான அனைத்து எம்.ஏ, எம்.காம் கோ - ஆப்ரேஷன், எம்எஸ்சி, எம்பிஏ படிப்புகளும் டிப்ளமோ,சர்டிபிகேட் படிப்புகளான ஜிஎஸ்டி, அக்கவுண்டிங் & பைனான்ஸ், தமிழ் ஜர்னலிசம், இங்கிலிஷ் ஜர்னலிசம், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன், யோகா, ஸ்போக்கன் இங்கிலிஷ், லைப்ரேரி சைய்ன்ஸ் படிப்புகளும், இசை மற்றும் நடன படிப்புகளான பிஎப்ஏ, எம்எப்ஏ, டிப்ளமோ இன் நட்டுவாங்கம் கிரேட் படிப்புகள் போன்ற அனைத்து அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியான படிப்புகளை தொலைதூர கல்வி வாயிலாக வேலை பார்த்து கொண்டே படிக்கலாம்.

இதற்கான விண்ணப்பமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே. விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு 0424-2214787 என்ற தொலைபேசி எண்ணிலும், 7539914787 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என்று மைய பொறுப்பு அலுவலர் டாக்டர்.ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News