சத்தியமங்கலம் வனப்பகுதியில் விலங்குகள் கணக்கெடுப்பு பணி

சத்தியமங்கலம் வனப்பகுதியில், விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

Update: 2021-12-20 10:45 GMT

கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனச்சரகர், வனக்காப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில்,  யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் மழை காலத்துக்கு முன், பின் என ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

இதன்படி புலிகள் காப்பகத்தில், 10 வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மழை காலத்துக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி, நேற்று துவங்கியது. இந்த பணியில் வனச்சரகர், வனக்காப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 5 பேரை கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 10 வனச்சரகங்களுக்கும் சேர்த்து,  இதுபோல் மொத்தம் 600 குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கணக்கெடுப்பு நேற்று தொடங்கி,  வரும் டிசம்பர் 24-ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு நடைபெறுகின்றது.

Tags:    

Similar News