ஊராட்சி ஒன்றியங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்: ஈரோடு கலெக்டர்

டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 முடிய 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

Update: 2021-12-16 11:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பு 2021-22-ம் ஆண்டிற்கு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட உத்திரவிடப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டிற்கு டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 முடிய ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

முகாம்களில் பங்குபெறும் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடுநீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, சுன்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறுஅறுவை சிகிச்சைகள், நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.

மேலும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடைமுறைபடுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், கால்நடை வளர்ப்பில் உண்டாகும் சந்தேகங்களுக்கும் முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர் களிடமிருந்து பதில் பெறலாம். இம்முகாம்களில் கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்த 3 கன்று உரிமைய பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கால் நடைவளர்ப்போர் மற்றும் இம்முகாம்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்று கொள்ள வேண்டும். இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News