ஈரோடு: கால்நடை உதவியாளர் நேர்காணல் ரத்து - அலுவலகம் முற்றுகை
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை உதவியாளர் நேர்காணல் ரத்து -கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு;
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை உதவியாளர் நேர்காணல் ரத்தானதால் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஈரோடு ஸ்டேட் பாங்க் சாலையில் அமைந்துள்ள கால்நடை இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அழைப்பானை அனுப்பப்பட்டது. இதனையடுத்து, நேர்காணலில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதற்கிடையே நிர்வாக காரணங்களால் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அழைப்பாணை பெற்றவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.