Andiyur Weekly Market Betel Leaf Sales அந்தியூர் சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை:விவசாயிகள் மகிழ்ச்சி

Andiyur Weekly Market Betel Leaf Sales ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை ஆனதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.;

Update: 2023-10-31 04:30 GMT

அந்தியூர் வாரச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வெற்றிலை.

Andiyur Weekly Market Betel Leaf Sales

அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை ஆனது.ஈரோடு மாவட்டம் அந்தியூர் வெற்றிலை தமிழக அளவில் பெயர் பெற்றது. மிருதுவாக, சிவப்பாக மற்றும் சுவையாக இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்தாணி, ஆப்பக்கூடல், பிரம்ம தேசம், புதுக்காடு, சங்கராபாளையம், எண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

பெருந்துறை, கோபி, ஈரோடு, பவானி, மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வாரந்தோறும் வெள்ளி, திங்கட்கிழமைகளில் நடக்கும் அந்தியூர் சந்தைக்கு வந்து வெற்றிலையை கொள்முதல் செய்கின்றனர். அதன்படி, திங்கட்கிழமை (நேற்று) அந்தியூர் சந்தையில் வெற்றிலை விற்பனை நடந்தது. இந்த சந்தைக்கு அத்தாணி, கள்ளிப்பட்டி, வேம்பத்தி, வெள்ளாளபாளையம், காட்டுப்பாளையம், சந்தியபாளையம், பிரம்மதேசம், முனியப்பன்பாளையம், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

100 எண்ணிக்கையிலான வெற்றிலைகளை கொண்டது ஒரு வெற்றிலை கட்டு ஆகும்.அதனை கவுளி என்றும் சொல்வார்கள். இதில் ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.150க்கும், அதிகபட்ச விலையாக ரூ.170க்கும், பீடா வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.80க்கும், அதிகபட்ச விலையாக ரூ.90க்கும் விற்பனை செய்யப்பட்டது. செங்காம்பு வெற்றிலை கட்டு ஒன்று ரூ.20-க்கு விற்கப்பட்டது. வெற்றிலை மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு விற்பனையானது.ஐப்பசி மாத முகூர்த்தமாதம் என்பதாலும், கோயில் விசேஷங்கள், கிரகப்பிரவேசம், மற்றும்  தமிழகத்தில் பாரம்பரியமாகவே எல்லா விசேஷங்களிலும்  வெற்றிலையை உபயோகப்படுத்துவதால் அதன் தேவை அதிகரிப்பால் நல்ல  விலைக்கு விற்றுள்ளது. இதனால்  விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

Tags:    

Similar News