நசியனூர் அருகே வாய்க்காலில் மூழ்கி ஆந்திரா மாநில ஐயப்ப பக்தர் உயிரிழப்பு
நசியனூர் அருகே ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தார்.;
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ராமராவ். ஐயப்ப பக்தரான இவர் நேற்று டிரைவர் உட்பட்ட 4 பேர் கேரளா நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் சேலம்-கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நசியனூர் அருகே உள்ள வாய்க்காலில் இன்று காலை குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராமராவ் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்து போது நீரில் முழங்கினார்.
இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.